Latestமலேசியா

கடல் மணல் ஏற்றுமதிக்கு மலேசியா தடை! – சேவியர்

கோலாலம்பூர், ஜூலை. 5- கடல் மணலை ஏற்றுமதி செய்வதற்கு மலேசியா தடை விதித்திருப்பது சிங்கப்பூரை இலக்காகக் கொண்டு அல்ல. அது எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு தடை என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கடல் மணலை எடுப்பது என்பது உள்ளூர் தேவைகளுக்காக மட்டுமேயன்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அல்ல என்று அவர் சொன்னார். இத்தகைய நடவடிக்கைகளின் போது சுற்றுச்சூழல் பாதிப்புகள் இல்லாமல் இருப்பதற்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை வழங்கி வருகிறது என்றார் அவர்.

கடல் மணலை எந்தவொரு நாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதில்லை என்று பக்காத்தான் அரசாங்கம் பதவியேற்ற காலம் தொட்டு முடிவு செய்திருக்கிறது. இது சிங்கப்பூரை மட்டும் இலக்காகக் கொண்டது அல்ல. பொதுவாக எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி தடை செய்யப்படுகிறது என்று டாக்டர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

ஆனால் அதேவேளையில் ஆற்று மணல் ஏற்றுமதி செய்யப் படுவதற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அனுமதியுடன் அனுமதிக்கப்படுகிறது. இந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மலேசியாவின் கடல் மணலை நம்பி சிங்கப்பூர் பல விரிவாக்கத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடல் மணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டால் சிங்கப்பூர் உடனான உறவு பாதிக்கப்படும் என்று என்று கூறுவதற்கு இல்லை என டாக்டர் சேவியர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker