Latestஉலகம்

‘அமெசோன்’ நிறுவன தோற்றுனர் தம்பதியினர் விவாகரத்து ! – மனைவிக்கு 38.3 பில்லியன் டாலர் பங்குரிமை

சியாட்டில், ஜூலை.6-  ‘அமெசோன்’ இணையத் தள விற்பனை சந்தை நிறுவனத்தின் தோற்றுனர் ஜேப் பேஸோஸ்  தனது மனைவி மெக்கென்ஸி பேஸொஸை விவாகரத்து செய்ததை அடுத்து , அந்நிறுவனத்தின் 38.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு உரிமையை அடுத்து அப்பெண்மணிக்கு வழங்க வேண்டுமென நீதிமன்ற தரப்பு உத்திரவிட்டுள்ளது.

இந்த தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக கடந்த ஜனவரி மாதத்தில் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த விவாகரத்து உறுதியாகி விட்டால்  இந்நிறுவனத்தின் 4 விழுக்காடு பங்குரிமை தனது மனைவி பெயரில் பதிவு செய்யப்படும் என ஜேப் பேஸோஸ் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்தார்.

தற்பொழுது அந்நிறுவனத்தின் 114.8 மில்லியன் டாலர் மதிப்பிலான 12 விழுக்காடு பங்குகளை  ஜேப் கொண்டுள்ளார். மேலும் அவரின் துணைவியார் தமக்கு வழங்கப்பட்ட பங்குகளின் வாக்கு அளிக்கும் உரிமையையும் இவருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார் என அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker