Latestசினிமா

ஆண் துணையே வேண்டாம் ஓவியா வெறுப்பு!

சென்னை,ஜூலை .6- களவாணி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய ஓவியா எனக்கு ஆண் துணை தேவை இல்லை என்று கூறியிருக்கிறார்.

களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்  பிரபலமானார். தற்போது களவாணி படத்தில் அடுத்த பாகமான களவாணி இரண்டிலும் நாயகியாக நடித்துள்ளார் .

சற்குணம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல், விக்னேஷ் காந்த் ,ரோபோ சங்கர் நடித்துள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம்  அவரது திருமணம் பற்றியும் அரசியலுக்கு வருவீர்களா என்றும் கேள்வி கேட்கப்பட்டது .

அவற்றுக்கு ஓவிய அளித்த பதிலில் கூறியதாவது ‘நான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை. எனக்கு ஆண் துணை தேவை இல்லை. தனியாக இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே திருமணமே வேண்டாம். எதிர்காலத்தில் என் மனது மாறினால் பார்ப்போம் .

எனக்கு அரசியல் வரும் எண்ணம் எதுவுமில்லை சினிமாவில் நடிக்க வேண்டும். நான் நடிக்கும் படங்கள் லாபம் பார்க்க வேண்டும் .அது போதும்  தற்போதைக்கு என்று ஓவியா இவ்வாறு கூறினார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker