Latestஉலகம்

பேய் பிடித்ததால் 12 மாணவிகளைக் கற்பழித்தேன் – தலைமை ஆசிரியர்

டாக்கா, ஜூலை 6 , பாத்துல்லாவிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த கற்பழிப்புச் சம்பவத்தில் கைதான அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான ஆல் அமீன்,  தமக்குப் பேய் பிடித்ததால்தான் 12 மாணவிகளைக் கற்பழித்ததாகக் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கற்பழிக்கப்பட்ட மாணவிகளில் 10 வயது நிரப்பிய மாணவியின் தாயார் ஒருவர்  கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரைக் கைது செய்ததாகக் கூறினர்.

தொடக்கக்கட்ட விசாரணையில் ஆல் அமீன், தமக்குப் பேய் பிடித்திருந்ததால்  மாணவிகளைக் கட்டாயப்படுத்தி தம்முடன் உடலுறவு செய்ய வேண்டுமென கூறியதாகப் போலீசாரிடம் ஓப்புக்கொண்டார்.

இது போன்று தாம் 12 மாணவிகளுடன் உடலுறவு கொண்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்ததாகக்  காவல் துறை தலைவர் காசி சாம்சிர் ஊடின் கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட அந்த மாணவிகளில் 10 வயதுடைய ஒரு மாணவி பாடத்தில் வரும் கற்பழிப்புக் காட்சிகளைக் கண்ட அந்த மாணவி, தம்முடைய பள்ளி தலைமை அசிரியரும் தம்மிடம் இது போன்று நடந்து கொண்டுள்ளதாக அம்மாணவி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

பள்ளி தலைமை ஆசிரியரின் இந்தச் செயலை   நூற்றுக்கணக்கான மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து  அந்தத் தலைமை ஆசிரியருக்குத் தகுந்த  தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker