Latestசினிமா

மாறு வேடத்தில் தப்ப முயன்ற நடிகர் கைது!

ஐதராபாத், ஜூலை.6- போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்துவிட்டு மாறுவேடத்தில் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜியை ஆந்திரா போலீசார் மடக்கி பிடித்தனர்.

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி தனியார் நிறுவன மீடியா வழக்கில் போலீசார் 3 முறை விசாரணைக்கு அழைத்து வந்தனர் ஆனால் அவர ஆஜராகவில்லை் .

இந்நிலையில் நடிகர் சிவாஜி ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்ல இருந்தார். ஆனால் ஐதராபாத் போலீசார் ஏற்கனவே சிவாஜிக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில் சைபராபாத் விமான நிலைய அதிகாரிகள் சிவாஜி அமெரிக்க செல்ல இருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விமான நிலையம் வந்த போலிசார் சிவாஜி யாருக்கும் தெரியாமல் இருக்கும் விதமாக மொட்டை அடித்து மீசை இல்லாமல் டீ சர்ட் மட்டும் பேண்ட் அணிந்து மாறுவேடத்தில் தப்பிச் செல்ல இருந்ததை கண்டுபிடித்தனர். அங்கிருந்து உடனே சைபராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு 11 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சிவாஜியின் பாஸ்போர்ட் டை போலீசார் முடக்கி வைத்தனர். வழக்கு விசாரணை போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சிவாஜி கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker