Latestஉலகம்

‘ஸ்டீக்’ இறைச்சி தொண்டையில் சிக்கி முதியவர் இறப்பு

பிரிட்டன், ஜூலை 6 – கடந்த ஜனவரி மாதம், பிரிட்டனைச் சேர்ந்த 62 வயது குவின் பிரான்சிஸ், ‘பப்’ ஒன்றில் உணவு உட்கொண்டிருக்கும் போது, ‘ஸ்டீக்’ இறைச்சி தொண்டயில் சிக்கி இறந்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர்,  இறப்பதற்கு முன்பு அவர் பல வாரங்கள் கோமா நிலையில் இருந்துள்ளார்.  பின்னர் சிகிச்சை பயனின்றி இறந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாதிக்கப்பட்டவரின் சகோதரர் கென்னத்தும் இதேபோன்ற அசம்பாவிதம்  நிகழ்ந்தது. இருப்பினும், அவர் நபர் ஒருவரால் காப்பாற்றப்பட்டார்.

கென்னத் கூறுகையில், அவருக்கும் குவின் பிரான்சிஸ்க்கும் உணவை மெல்லாமல் விழுங்கும் பழக்கம் உள்ளது என்றார். மேலும், சம்பவம் நடந்தபோது யாரும் தனது சகோதரிக்கு முதல் உதவி கொடுக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker