Latestமலேசியா

அம்னோவின் முடக்கப்பட்ட நிதி-  1எம்டிபிக்குச் சொந்தமானது இல்லை

கோலாலம்பூர், ஜூலை 7 – அரசினால் முடக்கப்பட்டிருக்கும் அம்னோவின் நிதி 1எம்டிபியிலிருந்து வந்தப் பணம் இல்லையென அதன் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

அந்தப் பணம் முன்னாள் பிரதமருக்குச் சொந்தமானது அல்லவென்ற  ஆதாரங்களைக் காட்ட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பணத்தைக்  கைப்பற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் ஒரு காசு கூட 1எம்டிபியின் பணம் இல்லையென தம்மால் நிரூபிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

2011லிருந்து 2013 வரை அம்னோவுக்கு நஜிப்பிடமிருந்து பணம் கிடைத்ததாகவும் ஆனால் அது 2014இல் செலவாகிவிட்டது.

தமது தலைவர் பணத்தைப் பெற்றிருந்தாலும் அது பொதுமக்கள் நலன் கருதியே செலவிடப்பட்டதாகவும், நாட்டிலுள்ள 7,000 பள்ளிவாசல்களுக்கும்  இமாம்களுக்கும்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் செலவிடப்பட்டுள்ளது.

நஜிப்பின் சொந்தக் கணக்கில் இருந்து பணம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பணம் அம்னோ தொகுதிகள், கிளைகள் ஆகியவற்றிற்கு செலவிடப்பட்டுள்ளது.

நாட்டில் அரசியல் நிதி சம்பந்தமக்ச் சட்டம் எதுவும் இல்லை.  அம்னோவின் கணக்கில் இருக்கும் 20 கோடி ரிங்கிட்டானது, 2016இல் விற்கப்பட்ட சொத்திலிருந்து கிடைக்கப்பட்டது. மேலும் அம்னோ வெளியிலிருந்து கடனையும் பெற்றிருந்தது என அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் எம்ஏ சிசி 21.7 கோடி 1எம்டிபி பணத்தைக் கையகப்படுத்த 41 தனிநபர் மற்றும் அமைப்புகளின் மீது வழக்கைத் தொடர்ந்திருந்தது. அதில் அம்னோ பெரும் பணத்தைப் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker