Latestமலேசியா

கிளந்தானில் ஸாக்கிர் நாய்க்: உரிய பாதுகாப்பு ஏற்பாடு

கோலாலம்பூர், ஜூலை. 7- இந்தியாவினால் தேடப்படும் மதப் போதகர் ஸாக்கிர் நாய்க், ஆகஸ்டு 7ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதிவரைக்கும் கிளந்தானில் சமயப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு உரிய பாதுகாப்பை கிளந்தான் அரசாங்கம் உறுதிசெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு குறித்து கிளந்தான் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஹசானுடின் ஹசானுடன் மாநில அரசாங்கம் கலந்துரையாடல் நடத்தி இருப்பதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் முகம்மட் பட்ஜில் கூறினார்.

தாங்கள் அழைத்திருக்கும் அந்த மதப்போதகர் பிரபலமானவர். எனவே வருகையாளர்கள் உள்பட அனைத்து தரப்புக்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என்றார் அவர்.

இவர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் போலீசார் முன்னுரிமை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker