Latestஉலகம்

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹர்ரி -மேகன் மகனின் பெயர் சூட்டு விழா !

லண்டன், ஜூலை,8- பிரிட்டன் இளவரசர் ஹர்ரி -மேகன் தங்களுடைய மகன் பெயர் சூட்டு விழா புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.  தம்பதிகள் தங்களுடைய பிராக்மோர் வீட்டை புதுப்பிப்பதற்காக பொதுமக்களின் 2.4 மில்லியன் டாலர் பணத்தை செலவு செய்ததால் கடும் எதிர்வினையை சம்பாதித்தனர் .

அதனைத் தொடர்ந்து குட்டி இளவரசரின் புகைப்படத்தை வெளியிடாமல் அரச மரபை மீறி தனிப்பட்ட முறையில் பெயர் சூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்ததாலும்  பொதுமக்கள் விமர்சிக்கத் தொடங்கினார். இந்நிலையில் குட்டி இளவரசியின் பெயர் சூட்டு விழா ஆடம்பரம் இல்லாமல் சாதாரணமாக நடந்து முடிந்துள்ளது.

அந்தப் புகைப்படத்தினை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அரச தம்பதியினர் இந்த நாளில் மகிழ்ச்சியை பொது உறுப்பினருடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. மேலும் ஆதரவாளர்கள் கருணைக்கு மிகவும் நன்றி என குறிப்பிட்டுள்ளனர். அந்தப் படத்தில் இளவரசர் சார்லஸ், இளவரசி கமிலா,இளவரசர் வில்லியம்- கேட்  தம்பதியினர், இளவரசி டயானாவின் சகோதரிகள்,மேகனின் தாய் ஆகியோர் இடம்  பெற்றுள்ளனர் .  

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker