Latestமலேசியா

சாலைக்கு டாக்டர் டேவிட்டின் பெயரை சூட்டாதது ஏன்? -லிம் கேள்வி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.7- கடந்த மே மாதம் மறைந்த வரலாற்றுப் பேராசிரியர் கூ காய் கிம்மின் பெயர் சாலைக்கு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் வெகுகாலமாக தொழிற்சங்கவாதியான டாக்டர் வி. டேவிட்டின் பெயரை சாலைக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை என்ன ஆனது என்று ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேராசிரியர் கூ காய் கிம்மின் பெயர் சாலைக்கு வைக்கப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் டாக்டர் டேவிட்டின் பெயரை ஜாலான் பாராட் சாலைக்கு வைக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கைக்கு பதில் இல்லாமல் இருப்பது குறித்து லிம் கிட் சியாங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

மே தினத்தை தொழிலாளர் தினமாக மலேசியா கடை பிடிக்க காரணமாக இருந்தவர் டாக்டர் டேவிட்தான். அவரது பெயரை சாலைக்கு வைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை சிலாங்கூர் மந்திரிபுசார் அமிருடின் ஷாரி பரிசீலிக்காமல் இருப்பது குறித்து அவர் விளக்மளிக்க வேண்டும் என்று லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

அனைத்துலக தொழிற்சங்க அரங்கிலும் உள்நாடு தொழிற்சங்க அமைப்புக்களிலும் அவர் முத்திரை பதித்தவர்.

மலேசிய தொழிற்சங்க காங்கிரசிலும், மலேசிய போக்குவரத்து தொழிற்சங்கத்திலும் அவர் பொதுச் செயலாளராக இருந்தவர்.

அனைத்துலக தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ. அமைப்பிலும் முக்கிய பொறுப்புக்களை அவர் விகித்தவர். பூச்சோங் மற்றும் பங்சார் உள்பட பல்வேறு தொகுதிகளில் அவர் எம்.பி.யாகவும் சேவையாற்றியுள்ளார்.

பினாங்கு மாநில அரசாங்கம் தனது சாலைகளுக்கு அத்தகைய பலரது பெயரைச் சூட்டி இருக்கிறது. கர்ப்பால் சிங், நோர்டின் அகமட் மற்றும் பி.பட்டு ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதை லிம் கிட் சியாங் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker