Latestவாழ்க்கை

பார்வையற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை :-டிஎன்ஏ மூலம் வெளியான உண்மை! 

ஹனோய்,ஜூலை,7- வியட்நாமில் பார்வையில்லாத 14 வயது மகளை கர்ப்பமாக்கி குழந்தை பெறச் செய்தார் தந்தை என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமின் டேம் நொங் மாகாணத்தைச் சேர்ந்த கணவன்  மனைவிக்கு நான்கு பெண் பிள்ளைகளும்  ஒரு ஆண் குழந்தையும் உண்டு.  அதில் மூத்த மகளான 14 வயது சிறுமிக்கு கண்பார்வை கிடையாது .இந்நிலையில் குழந்தைகளின் தாய் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

இதனையடுத்து தந்தை கட்டுப்பாட்டில் குழந்தைகள் வளர்ந்து வந்தன. இந்த சூழலில் மூத்த மகளை அவள் தந்தை பலமுறை துஷ்பிரயோகம் செய்ததால் அவர் கர்ப்பமுற்றார். அதன் பின் மாணவியால் பள்ளிக்கு செல்லவும் முடியவில்லை.

பின்னர் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சிறுமி வீட்டுக்கு வந்து விசாரித்தபோது அனைத்து உண்மையும் தெரிய வந்தது. தற்போது அச்சிறுமி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இது தொடர்பாக போலீசார்  அந்த தந்தையை கைது செய்துள்ளனர். டிஎன்ஏ மூலம் அவர் தான் அந்த குழந்தைக்கு தந்தை என   உறுதியானது.

போலீஸார் கூறுகையில் ,சிறுமியின் தாய் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர்அண்டை அயலார்   அவருக்கு பண உதவி செய்தனர் .ஆனால் அதில் சிறிதளவு பணம் மட்டுமே  அவரது கணவர் சிகிச்சைக்கு செலவிட்டார் என்பது தெரிய வந்தது.

மீதி பணத்தை அந்த கணவர் மது அருந்துவதற்கும்  சூதாடுவதற்கும்  பயன்படுத்தியுள்ளார் .மனைவியின் மரணத்துக்கு பின்னர் கண்பார்வையற்ற மகளிடம் தவறாக நடந்து கொள்ள தொடங்கியதன் விளைவாக அவர் கர்ப்பமாகி குழந்தையும் பெற்றுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker