Latestவாழ்க்கை

புகையை விட உடல் பருமன் சில புற்று நோய்களுக்கு வழி வகுக்கும்!

லண்டன், ஜூலை .7 -பிரிட்டனில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் புகைப்பிடித்தலை விட சில வகை புற்று நோய்கள் உண்டாவதற்கு உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது என தெரியவந்துள்ளது.

பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமானது புகைப் பழக்கத்தை விடவும் உடல் பருமனானது குடல், சிறுநீரகம் ,கல்லீரல் ,கருப்பை புற்று நோய் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்கிறது .

மில்லியன் கணக்கிலான மக்கள் உடற்பருமன் காரணமாக புற்றுநோய் அபாயம் இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் உடல் பருமன் நோய் தொடர்பாக அந்த நிறுவனம் வைத்திருந்த பதாகை பிரச்சாரம் உடல் பருமனாக இருப்பவர்களை அவமானப்படுத்தும்   விதமாக இருப்பதாக விமர்சனத்துக்குள்ளானது

ஆனால் இந்த தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டுக்கு ஆளா வது  இது முதல் முறையல்ல. பிப்ரவரி மாதம் நகைச்சுவை நடிகர் சோபி ஹகென்  தனது டிவிட்டரில் இப்பிரச்சாரம் குறித்து விமர்சித்தார்.

ஒரு டுவிட்டர் பயனர் உடல் பருமன் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றை இணைத்து பிரச்சாரம் செய்வது புதிய மலிவுத்தனத்தை  எட்டி உள்ளது என குறிப்பிட்டுள்ளார் .

இந்த ஆய்வு என்பது புதிய உடல் பருமன் கொண்டவர்களை குறை கூறுவது அல்ல என்று பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. புகைப்பிடித்தல் உடல் பருமன் இரண்டுமே புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதை சொல்வதே இந்த ஆய்வின் நோக்கம்.

ஆனால் பிரிட்டனில் உடல் பருமன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 22 ஆயிரத்து 800 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம் புகைத்தல் காரணமாக 54 ஆயிரத்து 300 பேர் பாதிப்படைகின்றனர் என்கிறது இந்த ஆய்வு.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker