Latestமலேசியா

புலிகள் வேட்டையைத் தடுக்க போலீஸ் உதவி! – சேவியர்

தைப்பிங், ஜூலை.7- மலாயன் புலி இனங்கள் வேட்டையாடப் படுவதை தடுக்கும் நோக்கில் மலேசிய வன விலங்கு, தேசிய பூங்கா பராமரிப்புத் துறையுடன் போலீசார் முழு ஒத்துழைப்பை வழங்குவர் என்று நீர், நிலம் மற்றும் இயறகை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

புலிகள் வேட்டையைத் தடுக்கவும் அவற்றுக்காக வைக்கப்படும் கண்ணிகளை அகற்றவும் வன விலங்குத் துறையுடன் போலீசார் வனப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்குவர் என்றார் அவர்.

அதேவேளையில் இராணுவத்தினரின் ஒத்துழைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் இதில் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

வனத்துறை பாதுகாவலர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அனுமதி அளிக்காததால் புலிகளை கொல்வோருக்கு எதிரான நடவடிக்கைகள் சிரமமானதாக இருந்து வருவதாகவும் தாய்லாந்து மற்றும் பேரா எல்லைக்குள் நுழைந்து புலிகளை வேட்டையாடுகிறார்கள் என்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker