Latestவிளையாட்டு

ஆஸ்திரேலிய ஸ்குவாஸ் வெற்றியாளரானார் சிவசங்கரி

கோலாலம்பூர், ஜூலை 8 – தேசிய ஸ்குவாஸ் வீராங்கணையான எஸ்.சிவசங்கரி ஆஸ்திரேலியாவின் 2019ஆம் ஆண்டு மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றியாளரானார்.

20 வயதான சிவசங்கரி ஆஸ்திரேலியா பெகா கணறி கிளப்பில் நடந்த போட்டியில் ஜப்பானின் சத்தோமி வாத்தனாபேயை 5-11, 11-9,11-9 ஆகிய எண்ணிக்கையில் தோற்கடித்தார்.

பூர்வாங்க ஆட்டங்களில் அவர் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டின் நன், மலேசியாவின் ராச்சல் ஆர்னோல்டு ஆகியோரை வெற்றி பெற்ற பின்னர் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார்.

1979இல் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலிய பொதுப் போட்டில் வெற்றி பெற்ற மலேசிய மகளிரில் சிவசங்கரி மூன்றாமவர் ஆவார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker