Latestவிளையாட்டு

உலக மகளிர் கால்பந்து: அமெரிக்கா சாம்பியன்!

லியோன், ஜூலை. 8- பிரான்சில் நடந்த உலக கிண்ண மகளிர் கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4ஆவது முறையாக சாம்பியன் கிண்ணத்தை வாகை சூடியது. நேற்றைய இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் நெதர்லாந்து குழுவை வென்றது.

முற்பகுதி ஆட்டத்தின் போது இரு குழுக்களுமே மாறி மாறித் தாக்குதல் நடத்தின என்ற போதிலும் இருதரப்பு கோல் அடிக்கவில்லை. பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய பின்னர் 61ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனை ரிப்பினோ முதல் கோலைப் போட்டார். அடுத்து 69 நிமிடத்தில் மற்றொரு வீராங்கனையான லாவேல்லா 2ஆவது கோலை அடித்து அமெரிக்காவின் வெற்றியை நிலைநிறுத்தினார்.

ஐரோப்பிய சாம்பியனான நெதர்லாந்து மிகச் சிறப்பாக விளையாடியது என்ற போதிலும் கோல் வாய்ப்புக்களை தவற விட்டதால் சரிவுக்கு உள்ளாகி மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானது.

1991ஆம் ஆண்டு, 1999 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டு ஆகியவற்றில் ஏற்கெனவே உலகச் சாம்பியனாக வாகைசூடியுள்ள நிலையில் 4ஆவது முறையாக வெற்றி பெற்று மகளிர் கால்பந்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker