Latestமலேசியா

எம்ஏசிசியின் சந்தேக கைதிகளுக்கு நீதிமன்றத்தில் இனி ஆரஞ்சு சீறுடை கிடையாது !

புத்ரா ஜெயா, ஜூலை.8-  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் (எம்ஏசிசி) சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுவர்கள் இனி நீதிமன்றத்திற்கு ஆரஞ்சு நிற சீறுடை அணிந்து வர மாட்டார்கள் . இத்தகவலை ஆணயத்தின் தலைவர் லத்தீப்பா கோயா உறுதிப்படுத்தினார்.

ஆணையத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் முன் நிறுத்தும் பொழுது ஆரஞ்சு கலர் உடை அணிந்து வருகின்றனர். இது சிறை சட்டம், கூடரசு கட்டமைப்புக்கு எதிரானது என மனித உரிமை வழக்கறிஞர்கள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இனி ஆணையம் கைது செய்யும் அனைவரும் ஆரஞ்சு நிற உடை அணிய வேண்டியதில்லை என நான் உத்திரவு பிரப்பித்துள்ளேன். சிறையில் மட்டும் தான் அவர்களுக்கு அந்த உடை வழங்கப்படும்.

மேலும் ஆணையம் கைது செய்தவர்களுக்கு கைவிலங்கு அணிவிப்பது குறித்த புதிய சட்டங்களும் நாளை அறிவிக்கப்படும் என லத்திபா தெரிவித்துள்ளார். இந்த புதிய அமலாக்க சட்டங்கள் அனைத்தும் நாளை முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்த ஆரஞ்சு நிற உடை விவகாரம் குறித்து விமர்சனம் எழுந்தது. வழக்கறிஞர் என். சுரேந்திரன் இந்த விமர்சனத்தை முன் வைத்தார். ஆனாலும் ஆணையத்தின் அப்போதைய தலைவர் சூஸ்கிப்ளி அகமட் அச்செயல்பாட்டினை தற்காத்து பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker