Latestவிளையாட்டு

கோப்பா அமெரிக்கா: வென்றது பிரேசில்!

ரியோ டி ஜெனிரோ, ஜூலை. 8- கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் மீண்டும் சாம்பியனாக வாகைசூடியது. இறுதியாட்டத்தில் பெருவை 3-1 என்ற கோல்கணக்கில் அது வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்திலேயே பிரேசில் வீரர் சோஸா சோரஸ் முதல் கோலை அடித்து அரங்கத்தை அதிரவைத்தார்.

எனினும், 44ஆவது நிமிடத்தில் பெரு வீரர் பாவ்லோ குயெரேரோ பெனால்டி மூலம் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமமாக்கினார்.

முற்பகுதி ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்த நிலையில் பிரேசிலின் முன்னணி வீரர் கேப்ரியல் சீஸஸ் தனது குழுவின் 2ஆவது கோலை அடித்து வெற்றியை மேலும் பலப்படுத்தினார்.

எனினும், 70 ஆவது நிமிடத்தில் நடுவரிடமிருந்து 2ஆவது மஞ்சள் எச்சரிக்கை கார்டைப் பெற்றததால் சீசஸ் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போது கண்ணீருடன் திடலை விட்டு வெளியேறினார்.

அடுத்து ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் பிரேசில் மத்திய திடல் வீரர் ரிச்சலிசன் 3ஆவது கோலை போட்டு வெற்றியை திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker