Latestமலேசியா

நிதி முறைக்கேடு ; சுங்கை ரம்பாய் சட்டமன்ற உறுப்பினர் கைது !

புத்ரா ஜெயா, ஜூலை. 8-  நிதி முறைகேடு வழக்கில் சுங்கை ரம்பாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (தேசிய முன்ணணி) டத்தோ ஹாசான் அப்துல் ரஹ்மான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டார்

இவ்வழக்கு தொடர்பாக ஹாசானும் அவரின் உதவியாளர் குஸைமா அப்துல்லாவும் இன்று கைது செய்யப்பட்டு பின் எம்ஏசிசி ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். நாளை காலை அவ்விருவரும்  ஆயேர் கெரோ செஷன் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்படுவர் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்தீப்பா கோயா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் வியூகம் (என்பிஒஎஸ்) திட்டத்தின் கீழ் வகை செய்யப்பட்ட “ திட்டமிடு இணைப்பில் “ இந்த வழக்கு சம்பந்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker