Latestமலேசியா

பொது இடங்களில் பிள்ளைகளை சிறுநீர் கழிக்க வைக்கும் வெளிநாட்டினர் ! – விசாரணை மேற்கொள்ளப்படும்

கோத்தா கினபாலு, ஜூலை.8-  இங்குள்ள பொது இடங்களில் குறிப்பாக பேரங்காடி பகுதியில் வெளிநாடு சுற்றுப்பயணிகள் தங்களின் பிள்ளைகளை சிறு நீர் கழிக்க வைப்பது போன்ற புகைப்படம் – காணொளி சமூக வலைத் தளங்களில் வெளிவந்ததை அடுத்து இவ்விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என கோத்தா கினபாலு மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து புகைப்படம் –  வீடியோ காணொளி நேற்று சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. முதல் படத்தில் பெண்மணி ஒருவர் பேரங்காடியினுள் உள்ள குப்பைத் தொட்டியில் தனது பிள்ளையை சிறுநீர் கழிக்க வைக்கின்றார்.

இப்புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த நபர், இச்சம்பவம் நிகழும் பொழுது அங்கு பாதுகாவலர் யாரும் இல்லை. இனி பேரங்கடியில் உள்ள குப்பை தொட்டிகளில் கை வைக்கும் பொழுது கவனமாக இருங்கள் என கருத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து இதே போன்ற சம்பவ காணொளி ஒன்றினை வேறு ஒரு நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். சுமார் 3 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் மற்றொரு பேரங்காடி முன்புறத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடம் அருகே தம்பதியினர் தங்களின் குழந்தையை சிறுநீர் கழிக்க வைக்கின்றனர்.

இந்த இரு பதிவுகளிலும் உள்ளவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் போல் தெரிகின்றனர். அந்த பதிவுகள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளன.

ஆனால் இதுவரை இந்த பதிவுகள் குறித்து தங்களுக்கு யாரும் புகார் வழங்கவில்லை என கோத்தா கினபாலு மன்ற மாநகர் மன்ற மேயர் டத்தோ நோர்டீன் சிமான் கூறியுள்ளார்.

இருந்தாலும் இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் . சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகள் பார்வையிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்ர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker