Latestமலேசியா

மலாக்காவில் திடீர் வெள்ளம் ; 1,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 2 பள்ளிகள் மூடப்பட்டன !

மலாக்கா, ஜூலை.8-  நேற்று தொடங்கி இம்மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால்  இதுவரை 1000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புற்ற நிலையில் 2 பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நேற்று இரவு 8 மணி வரை இவ்வெள்ளத்தினால் மொத்தமாக 260 குடும்பங்களைச் சேர்ந்த 1,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மாநில பேரிடர் மேளான்மை செயலகத்தின் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த பெரும் வெள்ளத்தால்  மத்திய மலாக்காவில் உள்ள க்ரூபோங் ஆரம்பப் பள்ளி, அலோர் காஜாவில் உள்ள பெலிம்பிங் ஆரம்பப் பள்ளி என இரு பள்ளிகள் இன்று தொடங்கி தற்காலிகமாக மூடப்படுகின்றன என மாநில கல்வி இலாகாவின் தலைவர் டத்தோ அபு பாக்கார் சஹாரி தெரிவித்தார்.

க்ரூபோங் ஆரம்பப் பள்ளியில் சுமார் 1,236 மாணவர்கள் – 71 ஆசிரியர்களும் பெலிம்பிங் ஆரம்பப் பள்ளியில் 484 மாணவர்கள் – 40 ஆசிரியர்களும் இவ்வெள்ளத்தினால் பாதிப்புற்றுள்ளனர்.

ஆனால் இந்த தற்காலிக விடுமுறை மாணவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகின்றது. வெள்ளித்தில் பாதிப்புகளை எதிர்நோக்காத ஆசிரியர்கள் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும் என அவர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே  இவ்வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 34 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் தற்காலிகமாக அலோர் காஜாவில் உள்ள ஶ்ரீ பெங்காலான் இடைநிலைப்பள்ளியில் தங்க வைப்பட்டுள்ளனர். ஆயினும் அப்பள்ளியில் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன் என்றும் அவ்வறிக்கையில் டத்தோ அபு பாக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker