Latestமலேசியா

முக்குளிக்க சென்ற மூவர் மாண்ட விவகாரம் ; போலீஸ் தரப்பு விசாரணை அறிக்கைக்கு காத்திருப்பு !

கோலாலம்பூர், ஜூலை.8-  சபாவிற்கு உட்பட்ட செம்போர்னா கடல்பகுதியில் முக்குளிக்க சென்ற மூவர் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீஸ தரப்பு விசாரணை அறிக்கைக்கு வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்துறை அமைச்சு காத்திருக்கிறது என அத்துறை அமைச்சர் டத்தோ சலஹுடீன் அயுப் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 5ஆம் தேதியன்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் முக்குளிக்க சென்ற உள்ளூர் முக்குளிப்பு பயிற்சியாளர் ஸைனால் அப்டு (வயது 30), சீனா நாடு பிரஜைகளான ஸவ் ஸோங், ஸு யிங்ஜீ (வயது 26) ஆகிய மூவர் மாண்டனர்.

அம்மூவரும் இறந்த இடத்தில் அதிகளவில் மீன்களும் செத்து மிதப்பதை போலீசார் கண்டுள்ளனர். எனவே இப்பகுதியில் மீன்பிடி வெடிகுண்டு வெடிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. ஆனால் இத்தகவலை போலீஸ் தரப்பினர் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இது போன்ற மரண சம்பவங்கள் நிகழ்வது அரிது. இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. போலீஸ் தரப்பு விசாரணை முழுமைப் பெற்று அறிக்கை வந்தவுடன் தான்  இதற்கு பதில் கிடைக்கும்.

அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இவ்விவகரத்தில் போலீறஸ் தரப்பு  துரிதமாக விசாரணையை மேற்கொள்வர் என தாம் நம்புவதாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker