Latestஉலகம்

இங்கிலாந்தின் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன்!

லண்டன்,ஜூலை.8- இங்கிலாந்தின் போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் பிரெக்சிட் நடவடிக்கை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலையில் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்து விட்டார்.

இதனால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி புதிய தலைவரை தேர்வு செய்கிறது. புதிய தலைவருக்கான போட்டியில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆளும் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் தொடங்கியுள்ளன.இந்த வாக்குச் சீட்டுக்களை வாக்களித்து திருப்பி அனுப்பி வைக்க வரும் 22ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. இறுதி முடிவு அறிவிக்கப்படும் இந்நிலையில் டைம்ஸ் நாளிதழ் சார்பில் கன்சர்வேடிவ் கட்சியினர் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. அதில் போரிஸ் ஜான்சனுக்கு 74 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. 26 சதவீதம் பேர் மட்டுமே ஜெராமி ஹண்டுக்கும் ஆதரவாக உள்ளனர். இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker