Latestமலேசியா

அன்னிய தொழிலாளர்களை குறைக்க ‘டிவெட்’ பயிற்சி உதவும்! -துன் மகாதீர்

புத்ராஜெயா, ஜூலை. 9- தொழில்நுட்பம், தங்கிப் படிக்கும் கல்வி மற்றும் பயிற்சி திட்டமான டிவெட் (TVET) நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார்

அந்நிய தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலையை இது மாற்ற உதவும். இந்த தொழில்நுட்ப பயிற்சியின் மூலம் தொழிலாளர் ஆள் பலத்திற்கு தேவையான உயர்திறன் கொண்ட ஊழியர்களை உருவாக்குவதற்கு டிவெட் தொழிற்பயிற்சி மூலம்அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும்.

உயர் தொழில்நுட்ப துறைகளில் உள்நாட்டுக்காரர்களை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இதன் மூலம் வழி காணப்படும் என்று அவர் சொன்னார்.

இங்கு நடைபெற்ற டிவெட் மாநாட்டில் உயர் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் பிரதமர் துன் மகாதீர் கலந்துரையாடல் நடத்தினார். இந்தக் கலந்துரையாடலின் போது மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனும் உடனிருந்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker