Latestமலேசியா

அம்மை நோயினால் பாதிப்புற்ற பூர்வக்குடி பெண் மரணம் !

கோலாலம்பூர், ஜூலை. 9-  பாத்தே பூர்வக் குடியினர் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அம்மை நோய் தாக்கியதில் நேற்று உயிரிழந்தார். அவர் உலு திரெங்காணு பகுதியைச் சேர்ந்தவர். இத்தகவலை சுகாதாரத்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

39 வயதுடைய அப்பெண்மணிக்கு உலுதிரெங்கானு மருத்துவமனையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. மருத்துவ பரிசோதனையில் அம்மை நோய் கண்டிருப்பது தெரிய வந்ததை அடுத்து, நேற்று அவர் கோலா திரெங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஸஹிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆயினும் சிகிச்சை பயனளிக்காமல் அவர் நேற்றிரவு 7.40 மணியளவில் மரணமடைந்தார் என கோலாலம்பூர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 3ஆம் தேதி முதல் இன்று வரை இந்த அம்மை சார்ந்த நோய் குறித்து மொத்தமாக 178 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அதில் பெரும்பாலான சம்பவங்கள் கிளந்தான் மாநிலத்தில் நிகழ்துள்ளன.  இந்த சம்பவங்களில் இதுவரை மொத்தமாக நால்வர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker