Latestஇந்தியா

ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் ராஜகோபால்!

சென்னை,ஜூலை,9-ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சென்னை குற்றவியல் உயர்நீதிமன்றத்தில் இன்று சரண்டைந்தார்.இவர் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால்,தனது உடல் நிலையை காரணம் காட்டி சரணடைவதற்கு அவகாசம் வழங்க கோரினார்.ஆனால் அவகாசம் மறுத்து விட்ட உச்ச நீதிமன்றம் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் ராஜகோபால் சரணடைந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker