Latestஇந்தியா

உடலில் பெண் தன்மை : உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் !

சென்னை,ஜூலை,9- தன்னுடைய உடலில் பெண் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நண்பர்கள் கேலி செய்ததால் அவமானம் தாங்கமுடியாமல் மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த அவின்ஷூ படேல் வயது 20 என்கிற மாணவன் ஒருவன் சென்னையில் தங்கி சலூன் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார் .கடந்த சில நாட்களாகவே அவருடைய உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால் பெண்ணுக்கு உண்டான குணாதிசயங்கள் தென்பட்டுள்ளது .அவருடைய உடல் பாவனைகளும் நடையும் மாற்றம் ஏற்படுவதைக் அவருடைய நண்பர்கள் சிலர் கேலியும் கிண்டலும் செய்ய ஆரம்பித்தனர்.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மும்பையில் உள்ள தன்னுடைய பழைய நண்பனுக்கு போன் செய்துள்ளான் அவின்ஷூ. எனக்குள் பெண் தன்மை ஏற்பட்டு வருகிறது என அனைவரும் கேலி செய்கிறார்கள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறிவிட்டு போனை துண்டித்துள்ளான் . இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனுடைய நண்பன் பலமுறை போன் செய்தும் பதில் கிடைக்கவில்லை.

மறுநாள் காலையில் நீலாங்கரை கடற்கரையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸ் அவின்ஷூ பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்துள்ளனர் .

நான் ஒரு பையன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நான் நடப்பது ,நினைப்பது ,உணர்வது, பேசுவது ஒரு பெண் போன்று இருப்பதாக சொல்கிறார்கள். இந்தியாவில் வாழும் மக்கள் இதை விரும்புவதில்லை என ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவிட்டு இருப்பதை கண்டறிந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker