Latestமலேசியா

‘என்னிடம் உதவியை எதிர்பார்க்காதீர்!” -அரசியல்வாதிகளை எச்சரித்தார் லத்தீபா!

புத்ராஜெயா, ஜூலை. 9- தன்னிடமிருந்து எத்தகைய சாதகமான நிலையையும் அரசியல்வாதிகள் எதிர்பார்க்கக் கூடாது என்று திட்டவட்டமான எச்சரிக்கை விடுத்தார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்தீபா கோயா.

அதேவேளையில் தங்களின் சொந்த நலன்களுக்காக ஊழல் ஆணையத்தை வெறுமனவே தாக்கும் வேலையிலும் ஈடுபட வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

உங்களிடம் உண்மையான புகார்கள் இருக்குமேயானால், நீங்கள் யாராக இருந்தாலும் அந்தப் புகாரை எங்களிடம் கொண்டு வரலாம். நாங்கள் அதைத் தொடர்ந்து விசாரிப்போம் என்று எப்எம்டி ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

பொதுப்படையாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்வதிலும் ஒருவரை ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவதிலும் ஈடுபடுவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. இது போன்ற குற்றச்சாட்டுகளும் எதிர் குற்றச்சாட்டுகளும் ஊடகங்களில் அதிகம் இடம்பெறுகின்றன.

இத்தகைய ற அம்சங்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தை அரசியல் மையப்படுத்துவதாக அமையுமே தவிர, வேறு பலன் கிடைக்காது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

அதேவேளையில் சில தனிநபர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு மகஜர் கொண்டு வந்து வழங்குகிறார்கள். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டங்களில் பேசுகிறார்கள். இதுபோன்ற நடைமுறைகள் எந்த வகையிலும் பயன் தராது என்றார் அவர்.

போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் ஒரு பிரச்சினையை தொடர்ந்து விசாரிப்பதற்கு ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது என்று அவர் சொன்னார்.

அரசாங்க அமைப்புகளிலிருந்து யாரும் தம்மிடம் இது போன்ற விஷயங்களில் உதவி கேட்டு விட முடியாது. அதை ஒருபோதும் தான் ஏற்கப் போவதில்லை அது போன்று எதுவும் இதுவரை நடந்ததில்லை.

ஊழல் நடந்து இருக்குமேயானால் நிச்சயமாக அது பற்றிய விசாரணை நடத்தப்படும். அதுதான் என்னுடைய வேலை. யாராவது தவறு செய்திருந்தால், அதற்கான ஆதாரங்கள் இருந்தால், கொடுங்கள்.. நான் தொடர்ந்து விசாரணை செய்கிறேன் என்று லத்தீபா உறுதியாக தெரிவித்தார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker