Latestசினிமா

ஓட்டல் உரிமையாளர் மீது பாலியல் புகார்- பிரபல நடிகை !

புது டில்லி, ஜூலை.9- இரவு விருந்து ஒன்றிற்கு சென்றிருந்த போது ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டதாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பேபி,ரஸ்தம் உள்ளிட்ட பல இந்திப் படங்களில் நாயகியாக நடித்தவர் இஷா குப்தா. தமிழில் ‘யார் இவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் .இஷா குப்தா தனது தோழிகளுடன் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு இரவு விருந்து சாப்பிட சென்றார்.

அங்கே அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஓட்டல் உரிமையாளர் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்து உள்ளார். இஷா குப்தா கோபமடைந்துள்ளார் .

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது ஓட்டலில் ஒருவர் என்னை வைத்த கண் எடுக்காமல் கண்களால் பலாத்காரம் செய்தார் என்றார் . ஒழுங்கா நடந்து கொள்ளுமாறு இரண்டு மூன்று முறை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.

இதை அடுத்து என்னுடைய இரண்டு பாதுகாவலர்களும் என்னை சுற்றி நிற்க வேண்டியதாயிற்று .ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு இதற்கு சாட்சி அந்த நபரின் பெயரை கண்டுபிடித்து கூறுங்கள் இவ்வாறு ஈஷா கோரிக்கை விடுத்தார் .

இஷாவை கண்களால் பலாத்காரம் செய்த அந்த நபரின் பெயர் ரோஹித் விக் என்று அவரது அபிமான ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளனர் .

இதையடுத்து இஷா ,ரோஹித் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அவரை மீண்டும் விளாசியுள்ளார். ஒரு பெண்ணாகப் பிறந்தது சாபக்கேடா என்று கேள்வி எழுப்பியுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker