Latestமலேசியா

சாலை விபத்தில் 16 வயது மாணவன் மரணம்

மலாக்கா, ஜூலை 9, ஜாலான் புக்கிட் ரம்பாய்யில் நடந்த விபத்தில் 16 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இன்று காலை 7.45 மணியளவில் நடந்த இவ்விபத்தில் கிலேபாங் பெசார் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த நான்காம் படிவ மாணவனான  முகமட் ஷா டேனியல் முனாசிர் என அடையாளம் கூறப்பட்ட அந்த மாணவன், தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

சம்பத்தின்போது,  முகமட் ஷா டேனியல் தம்முடைய யாமாஹா SS ரக மோட்டார் சைக்கிளில் பத்தாங் திகாவிலிருந்து புக்கிட் ரம்பாயை நோக்கி பயணித்துள்ளான் என மலாக்கா போலீஸ் தலைவரான அஸ்சானிசார் அமாட் கூறினார்.

சம்பவ இடத்தை நெருங்கியதும், மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட கோளாறினால் இடது புற சாலையில் விழுந்த முகமட் ஷா சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இறந்த முகமட் ஷாவின் உடலை பிரேத  பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இவ்விபத்து  1987லின் சாலை போக்குவரத்துச் சட்டம் பிரிவு  41இன் கீழ் விசாரணை நடத்தப்படும் என அஸ்சானிசார் அமாட் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker