Latestமலேசியா

டேசா மெந்தாரியில் பெரிய அளவிலான சோதனை நடவடிக்கை – 31 பேர் தடுத்து வைப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9 – நேற்று தேசா மெந்தாரியின் 8 குடியிருப்பு வளாகங்களில் ஓப்ஸ் செகா ஜெனாயா சோதனை நடவடிக்கையில் 31 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

இரவு 10 மணியிலிருந்து 3 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் அந்நிய நாட்டவர்கள் என நம்பப்படும் 143 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

அவர்களிள் 36 பேர் பல்வேறு குற்றங்களுக்காக பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமைகத்துக் கொண்டு செல்லப்பட்டதாகப் போலீஸ் தலைவர் முகமட் ஸானி சே டின் தெரிவித்தார்.

தீவிர விசாரணையில் அந்நிய பெண்கள் 13 பேர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், போதைப்பொருள் உட்கொண்டிருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 18லிருந்து 50 வயதானவர்கள் ஆவர். பல வீடு புகுந்து திருடி வந்த 32 உள்ளூர் ஆடவனும் அதில் கைது செய்யப்பட்டான் என முகமட் ஸானி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker