Latestசினிமா

நடிகருடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகை ஓவியா !

சென்னை,ஜூலை.9- பிக்பாஸ் இந்த சீசனில் அனைத்து மக்களின் ஆதரவு பெற்றாலும் காதல் பிரச்சினை காரணமாக திடீரென வெளியேறியவர் நடிகை ஓவியா .இதைத்தொடர்ந்து அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவழைக்க முயற்சிகள் செய்தும் அது முடியாமல் போனது.

இரண்டாவது சீசனில் போட்டியாளர்கள் ஒருவராக வருவது போல் உள்ளே வந்து பிராங்க் செய்துவிட்டு பின் வெளியேறினார் .இதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனிலும் ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் வேட்பாளராக இல்லாமல் களவாணி 2 படத்தின் புரமோஷனுக்காக நடிகர் விமல் மற்றும் ஓவியா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே பைப்படி சண்டையால் பிக்பாஸ் வீடு அல்லோலப் படுகிறது. இந்நிலையில் ஓவியா விமல் வரும்போது ஒற்றுமையாக இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker