Latestமலேசியா

நெகிரி செம்பிலானில் டிங்கிக் காய்ச்சல் 86 விழுக்காடு அதிகரிப்பு

சிரம்பான், ஜூலை 9 – இவ்வாண்டு ஜனவரியில் இருந்து ஜூலை 6 வரைக்கும் நெகிரி செம்பிலானில் டிங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் 86 விழுக்காடு அதிகரித்து 1,268ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஸைனுடின் முகமட் அலி தெரிவித்தார்.

27ஆவது வாரத்தில் ஜூன் 30 லிருந்து ஜூலை 6 வரையில் 40 சம்பவங்கள் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சிரம்பானில் 1,028 சம்பவங்கள், தம்பினில் 67லும், போர்ட்டிக்சனில் 53ம், ஜெம்போலில் 49 சம்பவங்களும் ஜெலுபுவில் 26ம், ரெம்பாவில் 23ம் கோலபிலாவில் 22 சம்பவங்களும் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளன.

சிரம்பானில் மொத்தம் 10 வட்டாரங்களில் டிங்கிச் காய்ச்சல் அதிகமாக கண்டிப்பதாகவும் அதில், டேசா பால்மா அடுக்குமாடி வீடுகள் மற்றும் ஓக்லன்ட் வர்த்தக வளாகம் ஆகிய பகுதிகளில் டிங்கியின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.

டிங்கியை ஒழிக்க அடிக்கடி ஓப்ஸ் கெம்புர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டாக்டர் ஸைனுடின் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker