Latestமலேசியா

போதைப் பொருள் வழக்குகளில் இனி ‘கட்டாயம்’ வார்த்தை பயன்படுத்தப்பட மாட்டாது !

புத்ராஜெயா, ஜூலை.9-   இனி போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ‘கட்டாயம்’ (mandatory) என்ற வார்த்தைக் குறியீடு பயன்படுத்தப்பட மாட்டாது .இதன் வழி அக்குற்றத்தை எதிர்நோக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதா அல்லது 10 ஆண்டுகளுக்கு மேலான சிறை தண்டனை வழங்குவதா என்பதை நீதிபதி தேர்வு செய்து கொள்ளலாம் என  பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

இதுவரை குறிப்பிட்ட அளவு போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்தை எதிர்நோக்குபவர்களுக்கு ‘கட்டாய’ மரண தண்டனை விதிக்கப்படும் . கட்டாய மரண தண்டனை என்பது நீதிபதிகளை ஒதுக்கி வைக்கும் அதிகாரம் என பேசப்படுகின்றது.  சட்டம் கூட நீதிபதியின் தண்டனையை அறிவிக்கும் உரிமையை வழங்க மறுக்கின்றது என்பது போல் இது உள்ளது.

எனவே அரசாங்கம் இந்த வழக்குகளிலிருந்து “கட்டாயம்’ என்ற வார்த்தை பயன்பாட்டினை அகற்றுகிறது. இதன் வழி அக்குற்றங்களை எதிர்நோக்கும் நபர்களுக்கு என்ன தண்டனை வழங்கலம் என்பதை நீதிபதிகள் முடிவு செய்து கொள்ளலாம் என நேற்று நடைபெற்ற பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைமை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.

மலேசியாவில் தற்பொழுது பரவலாக குற்ற செயல்கள் நிகழ்கின்றன. அக்குற்றச் செயல்களில் இந்த போதை பொருள் பயன்பாடும் அடங்கும். எனவே சட்டத்திலிருந்து ‘கட்டாய’ வார்த்தை பயன்பாடு அகற்றப்பட்டு விட்டாலும் கடுமையான தண்டனை வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker