Latestமலேசியா

அரசின் நடவடிக்கையில் அரண்மனை தலையிடக்கூடாது – முகைதீன் யாசின்

கோலாலம்பூர், ஜூலை 10 – இளைஞர்களின் வயதை 40 லிருந்து 30 ஆகக் குறைக்கும் விவகாரத்தில் ஜோகூர் மாநில அரசு இரு முறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதால், ஆட்சியாளர் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டுமென பெர்சத்துவின் தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

திங்கட்கிழமை மாநில மந்திரி பெசார் வெளியிட்ட அறிக்கையில் அந்தப் புதிய விதியைத் தாங்கள் பின்பற்றப் போவதில்லை என அறிவித்தார்.

எனினும், ஒரு நாளைக்குப் பின்னர், ஆட்சிக்குழு கூட்டத்திற்குப் பின்னர், மந்திரி பெசார் புதிய விதிமுறைக்கு ஒப்புதல் தந்ததாக அறிவிக்கபட்டது. அதனையடுத்து அதே இரவில், ஜோகூர் மாநில அரசு பழைய விதிமுறையான 40 வயதைப் பின்பற்றும் என  அறிவிக்கப் பட்டது.

இந்த விவகாரத்தில் நாடு முழுமைக்கும் புதிய நடைமுறை ஒரே சீராகப் பின்பற்றப்பட வேண்டுமென மத்திய அரசு விரும்புவதாகவும், ஜோகூர் அரசின் நிலையில்லாத அறிக்கைகளுக்கு ஜோகூர் பட்டத்து இளவரசர், துங்கு இஸ்மாயில்தான் காரணமாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker