Latestமலேசியா

கற்பழிப்பு: ஆட்சிக் குழு உறுப்பினர் இரவோடு இரவாக கைது!

ஈப்போ, ஜூலை. 10- தம்முடைய வீட்டில் பணிபுரிந்த இந்தோனிசிய பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்யப்பட்டிருந்த ஜசெகவைச் சேர்ந்த பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரை நேற்று இரவிலேயே போலீசார் கைது செய்தனர்.

நேற்று ஜெலாப்பாங் போலீஸ் நிலையத்தில் இந்த ஆட்சிக்குழு உறுப்பினருக்கு எதிராக இந்தோனேசிய பிரஜையான அந்தப் பணிப்பெண் புகார் செய்திருந்தார்.

பாலியல் பலாத்காரம் செய்ததாக அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதன் அடிப்படையில் அந்த ஆட்சிக்குழு உறுப்பினர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் படைத் தலைவர் ரஷாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

முழுமையான, நேர்மையான விசாரணையை உறுதிப் படுத்தும் நோக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரி விளக்கினார்.

மேலும் இந்த கைது நடவடிக்கை குறித்து மேற்கொண்டு அவர் எந்தத் தகவலையும் வெளியிட மறுத்துவிட்டார். பேரா மாநிலத்தில் ஆட்சிக் குழுவில் உறுப்பினர்களாக ஐந்து ஜசெகவினர் இடம் உள்ளனர். வோங் மெய் இங், சிவநேசன், பால் யோங், ஹோவார்டு லீ மற்றும் அப்துல் அஸீஸ்பாரி ஆகியோர் ஆட்சிக்குழுவில் உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அந்த ஆட்சிக்குழு உறுப்பினர் முதன் முறையாக அந்தப் பொறுப்பை வகித்தாலும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker