Latestசினிமா

நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர்! ராபர்ட்  விளக்கம் 

சென்னை, ஜூலை். 10-  நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா. இவர் சந்திரலேகா,மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் .

2000 ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். அதன்  பின்னர் அவரை விவாகரத்து செய்தார். அதனை பின் 2007 இல்  ஆனந்த்ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது .அதன் பிறகு எம்ஜிஆர் ,சிவாஜி ,ரஜினி ,கமல் என்ற படத்தை தயாரித்தார்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராபர்ட்  நடித்துள்ளார் . அப்படத்திலிருந்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

தற்போது ஆனந்தராஜ் தனது குழந்தையை கடத்தி விட்டதாக அளித்த புகாரின் பேரில் தெலுங்கானா போலீஸ் பிக் பாஸ் வீட்டிற்கே சென்று விசாரித்துள்ளனர்.  இதன் மூலம் மீண்டும் பரபரப்பாகி உள்ள அவரது மூன்றாவது கணவர் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இதற்கு விளக்கமளித்த ராபர்ட்  அவர் கூறியதாவது,  வனிதா உடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்தேன். அந்த படத்தில் நான்  நடித்தேன்.

அப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக என்னை காதலித்தது போல தவறான தகவலை பரப்பினார் வனிதா. இது மோசடித்தனம் .இதுகுறித்து அவரிடம் கேட்டபோது படத்தின் விளம்பரத்திற்காக செய்தேன் .பொறுத்துக் கொள் என்றார். என்னை அவரது மூன்றாவது கணவர் என்று சொல்வது வருத்தமளிக்கிறது இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில்  ராபர்ட் வனிதா பெயரை கையில் பச்சை குத்தியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker