Latestமலேசியா

நான் பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்யவில்லை – பவுல் யோங்

ஈப்போ, ஜூலை 10 – தாம் தம்முடைய முன்னாள் பணிப்பெண்ணை கற்பழிக்கவோ அல்லது மானபங்கம் செய்யவோ இல்லையென துரோனோ சட்டமன்ற உறுப்பினரான பவுல் யோங் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியைக் கேட்டு தாம் ஆச்சரியமும் ஆத்திரமும் அடைந்ததாகவும் தம்மீது கூறப்படும் குற்றசாட்டை தாம் வன்மையாக மறுப்பதாகவும் தெரிவித்தார்.

நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் கொடுத்த பின்னர், பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர்த்து பவுல் யோங்கின் குடும்பத்தாரின் வாக்குமூலம் பெற்றதோடு, பவுலின் ஈப்போ மேருவில் இருக்கும் அவரின் வீட்டையும் போலீசார் சோதனையிட்டனர்.

பவுல் யோங்கின் கைதினை அடுத்து நாளை நடைபெறவிருந்த ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி பிரமாணச் சடங்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதோடு இன்று நடைபெறவிருந்த ஆட்சிக் குழுக் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது.

49 வயதான பவுல் யோங், முதன் முறை ஆட்சிகுழு உறுப்பினராகவும் பெரா ஜசெகவின் பொருளாளராகவும் இருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker