Latestஉலகம்

பிரபலமான “பப்பல் டீயில்” அழுகிய பழங்களா?

பெய்ஜிங், ஜூலை 10 – இந்த நவீன யுகத்தில், எத்தனையோ  மாற்றங்கள் வந்து விட்டன.  நாம் உண்ணும் உணவிலிருந்து அனைத்துமே மாற்றம் கண்டு விட்டன.

அவ்வகையில் இன்றைய காலக் கட்டத்தில் , உலகளவில் பிரசித்தி பெற்ற பப்பல்  [Bubble tea) எனும் தேநீர் பானம் மீது  மோகம் கொண்டு விரும்பிப் பருகுவோர் அதிகம்.

எனினும்,  அது  சுத்தமாக, சுகாதாரமான முறையில்தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வகையில் சீனாவில் உள்ள “டீலேண்ட்” எனும் கிளை அலுவலகக் கடையை  ஊராட்சி நிர்வாகத்தினர் இழுத்து மூடியதாக   ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த “பப்பல் டீ” தயாரிக்கும் முறையை ஆய்வு செய்ய அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சி  நிருபர் ஒருவர்,  இரகசிய  ஊழியராக வேலையில் சேர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதில் அழுகிய பழங்களைக் கொண்டும் , அசுத்தமான முறையிலும் பானங்களைத் தயாரிப்பது அம்பலமானது.

மேலும்,  அவர்கள் கைத்தொலைபேசி மற்றும் இதர பொருட்களைப் பயன்படுத்திவிட்டு,  கையுறைகள் ஏதுமின்றி அந்தப் பானங்களைத் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதும் அந்த நிருபர் வெளியிட்ட புகைப்படங்களில் தெரிய வந்தது.

வாழைப்பழம், மாம்பழம் , கிவி போன்ற அழுகிய பழங்களை அவர்கள் குளிசாதன பெட்டிக்குள் வைத்து, பின்னர் அவற்றைப் புதிய பழங்களோடு கலந்து,  அந்தப் பானத்தைத் தயார் செய்கின்றனர்.
இச்சம்பவத்தை ஒட்டி  சமூக வலைதளங்களில் பொதுமக்கள்   கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker