Latestசினிமா

ஆடம்பர மாளிகை:-அதிரடி முற்றுப்புள்ளி வைத்த தமன்னா!

மும்பை,ஜூலை,11- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை தமன்னா. நடிகை தமன்னா இதுவரை தமிழ்  படங்கள் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் தற்போது இந்திப் படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

மும்பையில் வசித்து வருகிறார்.தற்போது  இவரின் வீடு அருகிலேயே வெர்சோவா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மிகப்பெரிய ஆடம்பர அப்பார்ட்மெண்டை மார்க்கெட் விலையைவிட அதிக தொகை கொடுத்து வீடு  வாங்கியதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து முதல்முறையாக தமன்னா வெளிப்படையாகவே கூறி உள்ளார் .அவர் கூறுகையில் மார்க்கெட் விலையை விட அதிக தொகை கொடுத்து நான் ஏன் ஒரு வீட்டை வாங்க வேண்டும். உண்மையில் ஆடம்பர அபார்ட்மென்ட் வாங்கி இருப்பது நிஜம் தான்.

அந்த ஆடம்பர ஆபர்மெண்டில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தபின் பெற்றோருடன் அந்த வீட்டில் குடியேற உள்ளேன் என்று கூறியுள்ளார் .இதன் மூலம் தமன்னா ஆடம்பர அபார்மெண்ட் வாங்கி இருப்பது உண்மை என்பது தெரிய வந்தது போல் அவர் அதிக விலை கொடுத்து வாங்க வில்லை என்ற வதந்திக்கான தெளிவு உண்மையும் தெரிய வந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker