Latestமலேசியா

இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் பட்டியலில் ஸாக்கிர் நாயக் இல்லை! – மொகிடின்

கோலாலம்பூர், ஜூலை. 11- இந்தியாவில் தேடப்படும் மதபோதகர் ஸாக்கிர் நாயக்கின் பெயர் இண்டர்போல் அமைப்பினால் தேடப்படுவோருக்கான சிவப்பு நோட்டீஸ் பட்டியலில் இடம் பெற்றிருக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் தெரிவித்தார்.

ஸாக்கிர் நாயக்கை கைது செய்து நாடு கடத்தும்படி இந்தியாவினால் கோரப்பட்டு வருகிறது. மேலும் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானப் பட்டியலின்படி சந்தேகத்துக்குரிய பயங்கரவாதிகளின் பட்டியலில் ஸாக்கிர் நாயக் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை என்றும் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் தெரிவித்தார்.

ஸாக்கிர் நாயக்கை நாடு கடத்தும் படி கோரும் இந்திய அரசாங்கத்தின் கோரிக்கை தொடர்பில் ஆகக்கடைசியான நிலவரத்தை விளக்கும்படி நாடாளுமன்றத்தில் குபாங் கெரியான் பாஸ் எம்பி துவான் சையட் இப்ராகிம் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வப் பதிலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

செல்லுபடியாகத்தக்க ஒரு நாட்டின் கைது உத்தரவின் அடிப்படையில் இண்டர்போலில் இடம்பெற்றுள்ள ஒரு உறுப்பு நாடு விடுக்கும் கோரிக்கையின் பேரில் சிவப்பு நோட்டீஸ் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் மலேசியாவுக்குள் ஸாக்கிர் நாயக் வருவது தடுக்கப்படவில்லை. ஏனெனில், அவர் முறையான நடைமுறைப்படி, விதிமுறைப்படி நாட்டின் சட்டத்திற்கு ஏற்ப அவரது வருகையை அமைந்தது என்று தம்முடைய பதிலில் மொகிடின் யாசின் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் குறை கூறுவது போல சிறப்பு சலுகைகளை அல்லது அனுமதி எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை என்று அவர் விளக்கினார். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி தூதரக குறிப்பின் அடிப்படையில் ஸாக்கிர் நாயக்கை கைது செய்வதற்கான கோரிக்கையை இந்திய அரசாங்கம் விடுத்தது என்பதை மொகிடின் யாசின் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் ஜனவரி 19ஆம் தேதி அவரை நாடு கடத்தும்படி கோரும் அதிகாரப்பூர்வ விண்ணப்பம் கிடைத்தது என்றார் அவர்.

1992 ஆம் ஆண்டில் நாடு கடத்தல் உடன்பாட்டின்படி மலேசியாவுக்கு இந்தியாவுக்கும் இடையே நாடு கடத்தல் இணக்கம் இருப்பதாகவும் ஆனால் பாதிக்கப்பட்ட நபருக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்ற நிலை இருக்குமானால் அதற்கு விதிவிலக்கு உண்டு என்றும் அவர் சொன்னார்.

அந்த அடிப்படையில் இத்தகைய நாடு கடத்தல் கோரிக்கையை நிராகரிக்க உடன்பாட்டு விதிமுறைகளின்படி மலேசியாவுக்கு உரிமை உண்டு என்று நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker