Latestமலேசியா

இந்தோனேசிய காதலியை கொலை செய்த பின் தூக்கில் தொங்கிய இந்திய பிரஜை !

கோலா லங்காட், ஜூலை. 11- நேற்று ஜாலான் கம்போங் தாலி ஆயர் எனும் குடியமைப்புப் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் இறந்து கிடந்த சம்பவம் கள்ளக் காதலினால் ஏற்பட்டது என அம்மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டண்ட் அஸிஸான் துக்கிமான் தெரிவித்தார்.

முன்னதாக அவ்வீட்டில் இந்திய பிரஜை (ஆடவர்) ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் இந்தோனேசிய பெண்மணி படுக்கைறையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதுமாக போலீசார் கண்டுள்ளனர்.

இறந்து கிடந்த இருவரும் காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்னும் சில நாட்கள் கழித்து அப்பெண் தனது தாய் நாட்டிற்கு திரும்ப எண்ணம் கொண்டிருந்துள்ளார்.

ஆனால் அவர் தாயகம் திரும்புவதில் காதலருக்கு உடன்பாடு இல்லை என தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. அப்போது அந்நபர் இரும்புக் கம்பி கொண்டு தனது காதலியின் தலையில் தாக்கியுள்ளார். தொடர்ந்து அவரின் கழுத்தை கயிற்றால் நெரித்துள்ளார்.

பின்னர் அப்பெண்மணி இறந்தது தெரிய வந்த பின் அந்நபர், பீதியடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் எனபது விசாரனையில் தெரிய வந்துள்ளது என அவர் விவரித்தார்.

இச்சம்பவத்தை தண்டனைச் சட்டம் செக்‌ஷன் 302 இன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டோம். இதில் பிறர் சம்பந்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் வழக்கு முழுமையடைந்து விட்டதாக கருதப்படுகின்றது என்றும் அஸிஸான் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker