Latestமலேசியா

உடம்புப் பிடி மையத்தில் சோதனை ; “ரகசிய அறை”யில் ஒளிந்திருந்த 16 அந்நிய பெண்கள் கைது !

பூச்சோங், ஜூலை.11-  நேற்று உடம்புப் பிடி மையம் ஒன்றில் போலீசார் சோதனை மேற்கொள்ளும் போது அங்கு பணி புரிந்து வந்த 16 அந்நிய பெண்கள் பிரத்யேகமாக உருவாகப்பட்ட “ரகசிய அறை”யில் ஒழிந்து தப்பிக்க முற்பட்டுள்ளனர். ஆனாலும் போலீசார் அவர்களின் முயற்சியை முறியடித்துள்ளனர்.

பூசாட் பண்டார் பூச்சோங்கில் உள்ள அந்த உடம்பு பிடி மையத்தில் சட்டதிற்கு புறம்பான செயல்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் கிடைக்கபெற்றன. இதனையடுத்து சிலாங்கூர் காவல்ப்படையின் சட்ட விரோத சூது, ரகசிய குழு -செயல் தடுப்பு பிரிவினர் (டி7) நேற்று மாலை 6 மணியளவில் அம்மையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் என துணை சுப்ரிண்டண்ட் அஸ்மி ஷுகுர் தெரிவித்தார்.

சோதனை மேற்கொள்ளும் பொழுது அம்மையத்தில் ஆட்கள் யாரும் இல்லாதது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இவ்விடத்தை மேலும் தீவிரமாக சோதனையிட்ட போது “ரகசிய கதவு” ஒன்றை கண்டோம். அதன் பின்னால் இருந்த அறையில் அம்மையத்தில் வேலை செய்து வரும் 16 வியட்னாமிய பெண்கள் ஒளிந்து கொண்டிருந்தனர்.

20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் அம்மையத்தில் உடம்புப் பிடிக்கு பிடிக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், ஆணுறை, 189 வெள்ளி ரொக்கப் பணம்  ஆகியவற்றை கைப்பற்றினோம். ஆணுறை கிடைக்கபெற்றதன் வழ அங்கு பாலியல் சேவை வழங்கப்பட்டு வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் விவரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker