வாழ்க்கை

உலக கிண்ண கிரிக்கெட்: பரிதாபமாக வீழ்ந்தது இந்தியா!

லண்டன், ஜூலை, 11- உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் எளிதாக வெல்லக் கூடிய ஒரு ஆட்டத்தை கைகழுவி விட்டு இந்தியா ஏமாற்றத்துடன் வெளியேறியது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபகரமாக தோல்வி கண்டதன்வழி இந்தியா. கோடிக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றியது.

செவ்வாய்க்கிழமையன்று இந்த அரையிறுதி ஆட்டம் தொடங்கியது என்றபோதிலும் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் புதன்கிழமையன்று இந்த ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து தனது ஆட்டத்தின் முடிவில் 239 ரன்கள் எடுத்திருந்தது. இந்த இலக்கை இந்தியா மிக எளிதாக எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் ஆட்டம் தொடங்கிய பின்னர் எல்லாம் தலைகீழ் ஆனது, ரோகித் சர்மா, லோகேஸ் ராகுல், விராட் கோலி ஆகிய மூவரும் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார். ஆக 70 ரன்கள் அடிப்பதற்குள் இந்திய 5 விக்கெட் இழந்து பரிதவித்தது.

அடுது பாண்டியாவும் டோனியும் கலத்தில் நிலைத்து ஆடும் முயற்சியில் இறங்கினர் என்றாலும் குறைந்த ரன்களில் பாண்டியாவும் வெளியேறி வெளியேறினார். ஜடேஜாவுடன் ஜோடி சேர்த்து டோனி நிலைத்து ஆடினார். 50 ரன்களில் டோனி வெளியேறிய போது ஓவர்களும் கிட்டத்தட்ட தீர்ந்த நிலையில் இந்தியா 221 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வி தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கும் அதன் ரசிகர்களுக்கும் இது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துவிட்டது. ஞாயிறன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் நியுசிலாந்து குழு ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்துடன் மோதவுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker