Latestஉலகம்

ஐஸ்க்கிரீம் கருவியில் சிறுநீர் கழித்த ஊழியர்

புளோரிடா, ஜூலை 11 – ஊழியர் ஒருவர், ஐஸ்கிரீம் கருவியில் சிறுநீர் கழித்தது மட்டுமின்றி மூக்கை தோண்டுவது போன்ற அருவருப்பான செயலைச் செய்தது ரகசிய கண்காணிப்பு காமராவில் அம்பலமாகியது.

கடந்த மாதம் புளோரிடாவின் இந்தியன் ஷோர் அருகே ‘லு லு ஐஸ்கிரீம்’ உள்ள ஐஸ்கிரீம் கருவியில், ஜங் சூன் விப்சா என்பவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர் அக்கடையில் உபகரணங்கள் மற்றும் கிண்ணங்கள் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் ‘பேசின்’-இல் குப்பைகளை வீசியதாகவும்  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைகளைக் கழுவாமல் ஐஸ்கிரீமைத் தொட்டதாக அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டது. அக்காணொளி பதிவில் மிகவும் அருவருப்பான முறையில் அவர் ஐஸ்கிரீம் அட்டைப் பெட்டியில் துப்புவது பதிவாகியது.

அவரது செயலால் சுத்தம் செய்யும் பணிக்காக ஐஸ்கிரீம் கடை மூடப்பட்டுள்ளது. உபகரணங்களைச் சுத்தம் செய்வதற்கும் பாதிக்கப்பட்ட ஐஸ்கிரீமை அகற்றுவதற்கும், சுமார் 2,000 அமெரிக்க டாலர் செலவிட வேண்டியிருந்தது.

உணவுக்கு சேதம் விளைவித்ததற்காக, கடந்த திங்களன்று வைப்சா குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker