Latestசினிமா

ஒருவனுக்கு ஒருத்தி:- எனக்கு நம்பிக்கை இல்லை -ராதிகா ஆப்தே

மும்பை, ஜூலை. 11- ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என நடிகை ராதிகா ஆப்தே பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நடிகை ராதிகா ஆப்தே ஏராளமான படங்களில் நடித்துள்ளார் தமிழில் ஆல் இன் அழகு ராஜா ,வெற்றி செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் கபாலி படத்தில் ஜோடி போட்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ராதிகா ஆப்தே.

பாலிவுட்டை பொறுத்தவரை பல முன்னணி நடிகைகள் தயங்கும் கேரக்டர்களையும் அசால்டாக செய்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி கன்னியாக மாறியும் வருகிறார்.

ராதிகா ஆப்தே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை கையாளுவதிலும் கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டி வருபவர் .இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ராதிகா ஆப்தே, ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக் கூடிய விஷயம் என்றார். ஆனால் அது கட்டாயமாக இருக்க வேண்டிய விஷயம் இல்லை.

மேலும் அப்படிப்பட்ட வாய்ப்பு ஒவ்வொரு நாளும் தனக்கு தேவைப்படுகிறது என்றும் நடிகை ராதிகா ஆப்தே துணிச்சலாக பேசியுள்ளார் . ஒரே நேரத்தில் வெவ்வேறு சூழ்நிலையில் பலரை தான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார்
ராதிகா ஆப்தே.

நடனம், நடிப்பு போன்றவற்றை எப்படி காதலிக்கிறேனோ அது போலத்தான் காதலும் என்று அவர் கூறியுள்ளார். கட்டின வெள்ளைக்கார கணவன் குத்துக் கல்லாட்டம் இருக்கையில் நடிகைக்கு தில் பாரேன் என்று நெட்டிசன்கள் இவரை திட்டாமல் விடவில்லை என்பதும் கூடுதல் தகவல்!!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker