Latestஉலகம்

ஒரே ஒரு பயணிக்காக புறப்பட்ட விமானம்! யாரந்த பயணி!!

வாஷிங்டன், ஜூலை.11- அமெரிக்காவின் தனியார் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று 7 மணி நேரம் தாமதமான  நிலையில் ஒரே ஒரு பயணிக்காக மட்டும்  விமானம் இயக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பி எஸ் ஏ விமான சேவை நிறுவனத்தின் விமானியாக செயல்பட்டு வருகிறார்  மெக்கார்மிக்.இவர் தமது பேஸ்புக் பக்கத்தில் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்று பதிவுசெய்துள்ளார். சம்பவத்தன்று மெக்கார்மிக் பணியாற்றிய பி எஸ் ஏ விமானம் ஒன்று பல தொழில்நுட்ப காரணங்களால் 7 மணிநேரம் தாமதமானது.

குறித்த விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகள் எல்லோரும்  வேறு விமானங்களுக்கு பதிவு செய்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆனால் ஒரே ஒரு பயணி மட்டும்தான்  அந்த குறிப்பிட்ட விமானத்திற்காக காத்திருப்பதாக கூறியுள்ளனர்.  மேற்கொண்ட பயணி  அந்த விமானியின் தாயார் என்பது அப்போது அவருக்கு தெரிய வந்துள்ளது. ஒரே ஒரு பயணி என்றாலும் விமானத்தை  இயக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் மெக்கார்மிக்கின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது்

தனது  தாயார் மேரி உடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்ட மெக்கார்மிக் தமது தாயாரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்  விமானியாகும் வாய்ப்பு அமைந்த அந்த சம்பவம் தம்மால் மறக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார் .

மெக்கார்மிக்கின் தாயாரும் ஒரு விமானி என்பதால் தமது மகனுக்கு விளையாட்டுப் பொருட்கள் விமானங்களையே அவர் வாங்கி தந்துள்ளார் .அதனாலேயே எதிர்காலத்தில் தாயாரை போன்று தாமும் ஒரு விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார் .

சம்பவத்தன்று தாமதமாகும் பிஎஸ்ஏ விமானத்தின் விமானி தனது மகன் என அறிந்த பின் தாயார்  வேறு விமானத்திற்கு  பதிவு செய்ய முயற்சிக்கவில்லை என்பது மட்டுமின்றி நீண்ட 7 மணி நேரம் அவர் காத்திருக்கவும் செய்துள்ளார் என மெக்கார்மிக் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker