Latestமலேசியா

கால்வாயில் விழுந்த 4 வயது சிறுவன் மரணம்

ரவாங், ஜூலை 11 – தாமான் பூங்கா ராயாவிலுள்ள பங்சாபூரி டாலியாவில்  நண்பருடன் விளையாட சென்ற 4 வயது சிறுவன் ஒருவன் 4 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்தான்.

நேற்று மதியம் 2 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் இறந்த முகமட் அமின் ஷா என்ற அச்சிறுவன்,  6 வயது நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தாகவும் அப்பொழுது முகமட் அமின் ஷா அணிந்திருந்த காலணி அருகில் உள்ள கால்வாயில் விழுந்துள்ளது என தகவல் கூறப்பட்டது.

கால்வாயில் விழுந்த காலணியை எடுக்க முற்பட்டபோது முகமட் அமின் ஷா தடுமாறி கால்வாயிலுள் விழுந்தான். அமினுடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பன், அமின் ஷா கால்வாயில் விழுந்த தகவலை அமினின் பெற்றோரிடம் கூறியுள்ளான்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கோலா குபு தீயணைப்பு வீரர்கள் அமினை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். சில மணி நேர தேடலுக்கு பின்னர்,  முகமட் அமினின் உடல் சம்பவ இடத்திலிருந்து 1 மீட்டர் தூரத்தில் கண்டுபிடுக்கப்பட்டது.

அமினின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோலா குபு பாரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker