Latestமலேசியா

குடும்பக் கட்டுப்பாடு செய்ய சொல்லி பூர்வ குடியினருக்கு மிரட்டல்? அரசு விசாரிக்கும் !

கோலாலம்பூர். ஜூலை.11- கடந்த காலங்களில் நாட்டில் உள்ள பூர்வ குடியினர் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர் எனும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் விசாரிக்கும் என தேசிய ஒருமைப்பாடு – சமூக நலத்துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்தார்.

“மொபைல் கிளினிக்” சேவை வழங்க பூர்வ குடியினர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற சுகாதார அமைச்சு அதிகாரிகள், அங்குள்ள பெண்களை குடும்ப கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வலியுறுத்தினர். மறுத்தால் அவர்களின் சுகாதார  காப்புறுதியை ரத்து செய்து விடுவதாக மிரட்டினர் என தெமியார் பகுதி மக்களில் ஒருவர் வெளியிட்ட அறிக்கை எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

இது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சினை, அரசாங்கம் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இது போன்ற செயல்கள் பல்லின மக்களை கொண்ட நம் நாட்டின் தார்மீக நெறிமுறை நடைமுறைகளை வரையறுக்கவில்லை.

எனவே இவ்விவகாரம் தொடர்பில் நான் கூடிய விரைவில் சுகாதார அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். அதே சமயம் இது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழுவும் செயல்ப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker