Latestமலேசியா

குடும்ப கட்டுப்பாடு செய்ய சொல்லி பூர்வ குடியினருக்கு அச்சுறுத்தலா? ஆதாரம் காட்டுங்கள் !

கோலாலம்பூர், ஜூலை. 11-   சுகாதார அமைச்சு அதிகாரிகள் பூர்வ குடி மக்களை குடும்ப கட்டுப்பாடு செய்ய சொல்லி வற்புறுத்தியதாக புகார் முன் வைப்பவர்கள், அதற்கான ஆதாரத்தையும் உடன் சமர்பிக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் கருத்துரைத்தார்.

அத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் பொழுது அதறற்கான ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும் என்பது அடிப்படை. இந்த விவகாரத்தில் ஆதாரம் முன் வைக்கப்பட்டால் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பொழுது நிலையான இயக்க முறைகளை (எஸ்ஒபி) தான் பின்பற்றி வருகின்றனர். எனவே அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்ய சொல்லி அச்சுறுத்தியதாக கூறப்படுவதை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

குறிப்பாக மருத்துவ அதிகாரிகள் யாரையும் குறிப்பிட்ட சிகிச்சை எடுத்துக் கொள்ள கூறி வலிவுறுத்த முடியாது என இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தார்.

முன்னதாக மொபைல் கிளினிக்சேவை வழங்க பூர்வ குடியினர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற சுகாதார அமைச்சு அதிகாரிகள், அங்குள்ள பெண்களை குடும்ப கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வலியுறுத்தினர். மறுத்தால் அவர்களின் சுகாதார  காப்புறுதியை ரத்து செய்து விடுவதாக மிரட்டினர் என தெமியார் பகுதி மக்களில் ஒருவர் புகார் வழங்கியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker