Latestமலேசியா

குளியல் அறையில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு பிடிபட்டது

தெமெர்லோ, ஜுலை 11, தாமான் தெமெர்லோ ஜெயாவிலுள்ள வீடொன்றின் குளியல் அறையில் பதுங்கி இருந்த 0.6 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை புக்கிட் அங்கின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பிடித்துள்ளனர்.

அந்த வீட்டின் உரிமையாளரான முதியவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த 7 தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த நீர் தடத்தில் மலைப்பாம்பு பதுங்கி இருந்ததைக் கண்டுள்ளனர் என புக்கிட் அங்கின் தீயணைப்பு மீட்பு படையின் தலைவரான ஹாஸ்னுடின் ஹுசின் தெரிவித்தார்.

அங்கு பதுங்கி இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிரத்தியேக தூண்டியைக்  கொண்டு 9 நிமிடத்தில் பிடித்துள்ளனர் என் ஹாஸ்னுடின் கூறினார். இச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அந்த 73 வயதுடைய முதியவர் எவ்வித காயமின்றி உயிர் தப்பினார் என்றும் பிடிப்பட்ட மலைப்பாம்பை சம்பவ இடத்திலிருந்து சில மீட்டர் துரத்திலுள்ள காட்டுப்பகுதியில் விடுவித்துள்ளதாகத்  அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker